Madras HC Warns Striking Transport Workers – Call of Strike or Search for a New Job (Tamil Version Included)

Taking a serious view of the strike called by certain transport unions, the Madras High Court today said the workers should get back to work or “face consequences”, including termination and contempt of court.

The Tamil Nadu State Transport Corporation (TNSTC) workers could not resort to such flash strikes without any prior intimation, causing trouble to the public, the first bench headed by Chief Justice Indira Banerjee said, while passing interim orders on a PIL filed in this regard.

The court said it was the duty of the state to ensure and protect the rights of its citizens during such circumstances.

“The striking workers should go back to work or face consequences, including termination and contempt of court,” it said.

The matter pertains to the strike called by certain transport unions across Tamil Nadu over wage-related issues. The strike entered its third day today.

The public interest litigation (PIL) petition was filed by a lawyer, on behalf of one Varaaki, seeking a direction to the state government to convene a meeting with the workers on strike and find a solution.

Opposition parties, including the DMK and the Left parties, besides actor Kamal Haasan, urged the government to put an end to the stalemate by holding talks with the trade unions.

CITU leader A Sounderrajan, who took part in the talks with the government yesterday, said “not even 10 per cent” of the buses were being operated across Tamil Nadu.

The Tamil Nadu State Transport Corporation curtailed bus services in many districts from Thursday night as crew members belonging to employees unions that did not agree to the wage accord offered by the government went on strike.

The strike, following failure of talks – on wage revision and clearance of pending dues – with Transport Minister M.R. Vijayabhaskar, affected bus services in Chennai, Madurai district, Coimbatore and Tiruchirapalli to a large extent since 6 p.m. on Thursday.

Tamil Version

அரசு பஸ் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உடனடியாக, போராட்டத்தை நிறுத்த வேண்டும்; இனியும் வேலைக்கு வராமல் இருந்தால், பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த வேலை பிடிக்காதவர்கள் வேறு வேலைக்கு போகலாம் என்றும், எச்சரித்துள்ளது. போராட்டம் காரணமாக, இரண்டு நாட்களாக, மக்கள் கடும் அவதியை சந்தித்து வருவதால், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

தொழிலாளர் சங்கங்களை பேச்சுக்கு அழைத்து, பிரச்னையை உடனடியாக தீர்க்கவும், போக்குவரத்து சுமுகமாக இயங்கவும், அரசுக்கு உத்தரவிட வேண்டும். மாற்று பணியாளர்களை பணியில் அமர்த்தி, போலீஸ் பாதுகாப்புடன், பஸ்களை இயக்கும்படி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: அத்தியாவசியமான, பொது மக்கள் பயன்பாட்டுக்கான சேவையை, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வழங்குகின்றனர். குறைகளை தெரிவிக்க, சட்டப்பூர்வமாக போராட, ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. இதில், எந்த சந்தேகமும் இல்லை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு, பொது மக்கள் செல்லும் உரிமையை, அரசு பாதுகாக்க வேண்டும். போக்குவரத்து கழக ஊழியர்கள் உட்பட, அரசு இயந்திரங்களால், இந்த உரிமையை, அரசு உறுதி செய்கிறது.

அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் என பலரும், பஸ்களை பயன்படுத்துகின்றனர். இந்த போக்குவரத்து பணிகளில் இடையூறு ஏற்பட்டால், இவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர்; இதர சேவைகளும் பாதிக்கப்படும். முன் அறிவிப்பு ஏதும் இன்றி, திடீரென போராட்டங்களில் ஈடுபடுவதால், பொது மக்கள் ஒரு இடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு செல்லும் உரிமை மறுக்கப்படுகிறது. இது, சட்ட விரோதமானது; பொது நலனுக்கு எதிரானது.

எனவே, போராட்டத்தில் ஈடுபட, போக்குவரத்து கழக தொழிலாளர்கள், குறிப்பாக, ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு, தடை விதிக்கப்படுகிறது. போராடும் ஊழியர்கள், உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வராமல், கடமையை செய்யாமல், எந்த ஊழியராவது இருந்தால், விளைவுகளை சந்திக்க வேண்டியது, அவர்களைப் பொறுத்தது. பணி நீக்கம் அல்லது அபராதம், நீதிமன்ற அவமதிப்பு ஆகியவையும், அதில் அடங்கும்.

இதற்கிடையில், ‘அரசுக்கு கொடுக்கும் சம்பளம் போதவில்லை எனில், போக்குவரத்து கழக ஊழியர்கள் வேறு பணிக்கு மாறிக் கொள்ளலாம்’ என, வழக்கு விசாரணையின் போது கூறப்பட்டதாகவும், தகவல் வெளியாகிஉள்ளது.