Thirukkural – 1.1.1 கடவுள் வாழ்த்து – The Praise of God

Thirukkural – 1. அறத்துப்பால் – Virtue 1.1 – பாயிரம் இயல்

Thirukkural in Tamil and Englsih with meaning

Thirukkural – 1.1.1 கடவுள் வாழ்த்து – The Praise of God

பால் : அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல் : பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம் : கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu) – The Praise of God

குறள் 0001 Couplet : 1

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

‘A’ leads letters; the Ancient Lord 1
Leads and lords the entire world.

Explanation : As the letter A is the first of all letters, so the eternal God is first in the world

Transliteration : Akara Mudhala Ezhuththellaam AadhiPakavan Mudhatre Ulaku

விளக்கம் : எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

குறள் – 0002 Couplet : 2

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.

That lore is vain which does not fall 2
At His good feet who knoweth all.

Transliteration :  Katradhanaal Aaya Payanenkol VaalarivanNatraal Thozhaaar Enin

Explanation :  What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?

விளக்கம் : தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.

கலைஞர் உரை: தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.

மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

சாலமன் பாப்பையா உரை: தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

குறள் – 0003 Couplet : 3

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

Long they live on earth who gain 3
The feet of God in florid brain.

Transliteration : Malarmisai Ekinaan Maanati SerndhaarNilamisai Neetuvaazh Vaar.

Explanation : They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

விளக்கம் : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

கலைஞர் உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

குறள் – 0004 Couplet : 4

4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

Who hold His feet who likes nor loathes 4
Are free from woes of human births.

Transliteration : Ventudhal Ventaamai Ilaanati SerndhaarkkuYaantum Itumpai Ila.

Explanation : To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

விளக்கம் : விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

கலைஞர் உரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மு.வ உரை: விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

சாலமன் பாப்பையா உரை: எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

குறள் – 0005 Couplet : 5

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்பு¡¢ந்தார் மாட்டு.

God’s praise who tell, are free from right 5
And wrong, the twins of dreaming night.

Transliteration : Irulser Iruvinaiyum Seraa IraivanPorulser Pukazhpurindhaar Maattu

Explanation : The two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God

விளக்கம் :  கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.

கலைஞர் உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

சாலமன் பாப்பையா உரை: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

குறள் – 0006 Couplet : 6

6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

They prosper long who walk His way 6
Who has the senses signed away.

விளக்கம் : ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.

Explanation : Those shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses

Transliteration : Porivaayil Aindhaviththaan Poidheer OzhukkaNerinindraar Neetuvaazh Vaar

கலைஞர் உரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

மு.வ உரை: தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

சாலமன் பாப்பையா உரை: தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

குறள் – 0007 Couplet : 7

7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

His feet, whose likeness none can find, 7
Alone can ease the anxious mind.

Explanation : Anxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable

Transliteration : Thanakkuvamai Illaadhaan Thaalserndhaark KallaalManakkavalai Maatral Aridhu.

விளக்கம் : தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.

கலைஞர் உரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

மு.வ உரை: அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை: அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

குறள் – 0008 Couplet : 8

8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

Who swims the sea of vice is he 8
Who clasps the feet of Virtue’s sea.

Explanation : None can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue

Transliteration : Aravaazhi Andhanan Thaalserndhaark KallaalPiravaazhi Neendhal Aridhu.

விளக்கம் : அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

கலைஞர் உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

மு.வ உரை: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

சாலமன் பாப்பையா உரை: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

குறள் – 0009 Couplet : 9

9. கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

Like senses stale that head is vain 9
Which bows not to Eight-Virtued Divine.

Explanation : The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation

Transliteration : Kolil Poriyin Kunamilave EnkunaththaanThaalai Vanangaath Thalai.

விளக்கம் : உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

கலைஞர் உரை: வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

மு.வ உரை: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை: கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

குறள் – 0010 Couplet : 10

10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

The sea of births they alone swim 10
Who clench His feet and cleave to Him.

Explanation : None can swim the great sea of births but those who are united to the feet of God

Transliteration : Piravip Perungatal Neendhuvar NeendhaarIraivan Atiseraa Thaar

விளக்கம் :

மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

Click here to read full Thirukkural

 

Leave a Reply

Close Menu
Skip to toolbar