Tamil Nadu govt buses off roads as transport unions go on strike (Tamil Version Included)

Bus services of the Tamil Nadu State Transport Corporation in many districts of the state were curtailed since Thursday night as crew members belonging to employees unions, which did not agree to the wage accord offered by the government, resorted to strike.

The strike, following failure of talks – on wage revision and clearance of pending dues – with Transport minister M.R. Vijayabhaskar, affected bus services in state capital Chennai, Madurai district, Coimbatore, Tiruchirapalli to a large extent since around 6 p.m. on Thursday.

With buses off the roads, many students went walking to schools and colleges this morning in the capital city, reports Sangeetha Kandavel.

Many commuters were stuck without a commute in Ramanathapuram on Friday.

Skeleton services on prime routes from Kancheepuram was ensured on Friday morning much to the relief of office-goers who were affected by the commencement of the bus strike by Tamil Nadu State Transport Corporation unions from Thursday evening.

With a section of union employees resorting to strike, the Tamil Nadu State Transport Corporation officials decided to operate buses with limited crew members on prime routes.

Enquiries reveal that around 20 STC vehicles were pressed into service on these routes till 8 a.m. in additional to the private mofussil buses that were allowed to ply on these routes.

Meanwhile, a group of striking employees who got furious over the vehicles that are being run on prime routes, turned their ire on the drivers and conductors of both the STC and mofussil buses. They allegedly warned them that they might face the aggression of striking employees at the destinations.

Tamil Version

போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் காரணமாக தமிழகத்தில் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ஒரு சில மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால், பொது மக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் அவதிக்குள்ளாயினர்.

சென்னையில் போலீஸ் பாதுகாப்புடன் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருவான்மியூர் பணிமனையில் 103 பஸ்களில் 35 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தனியார் ஊழியர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல இடங்களில் தனியார் ஊழியர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டது. பெரம்பூர், சுங்கசாவடி பணிமனைகளில் இருந்து குறைந்தளவு ஊழியர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னை அயனாவரம் – கொன்னூர் நெடுஞ்சாலையில், பஸ் மீது கல்வீசப்பட்டது. இதில் கண்ணாடி சேதமடைந்தது. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் 98 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் 99 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. நள்ளிரவு கிராமங்களுக்கு சென்ற பஸ்கள் மட்டும் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டன. ஜீப்கள், மினி பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. அதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பஸ்கள் இயங்காததால், கிராமங்களில் பள்ளிக்கு செல்லாமல் மாணவர்கள் வீடு திரும்பினர்.

நெல்லையில் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்குகின்றன. 215 பஸ்கள் இயங்க வேண்டிய நேரத்தில் சுமார் 100 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், மக்கள் அவதிப்படுகின்றனர். தொலைதூர பஸ்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன. அவையும் மதியத்திற்கு மேல் நிறுத்தப்படும் என்பதால், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்.

மதுரையில் ஒரு சில பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பொன்மேனி கிளையில், கோவை செல்லும் பஸ்சை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், திமுக மற்றும் மற்ற தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு காரணமாக அது கைகூடவில்லை. மதுரை தலைமையிடத்து பணிமனையில், அரசு பஸ் இயக்க முயற்சி செய்ததற்கு மற்ற ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால், இரு தரப்பிற்கு இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில், பஸ்கள் இயக்கவிடாமல் தகராறில் ஈடுபட்டதாக போக்குவரத்து ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரில் 200 பஸ்கள் இயங்க வேண்டிய நிலையில் 11 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
அரியலூரில் 140 அரசு பஸ்களில் 25 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. வேலூர் மண்டலத்தில் 700 பஸ்கள் இயக்கப்படவில்லை.

கோவை, ராமநாதபுரம், அரியலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் குறைந்தளவு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் அலுவலகம் செல்வோர், மருத்துவமனை மற்றும் வெளியூர் செல்ல வேண்டிய மக்கள் அவதிப்படுகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் 15 சதவீத பஸ்களே இயக்கப்படுகின்றன.

திருச்சியில், தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. மலைக்கோட்டை, புறநகர், கண்டொன்மென்ட் தீரன் நகர் கிளைகளை அணுகலாம் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.